×

அமுதுண்ணாக்குடியில் உடற்பயிற்சி கூடம், பூங்கா திறப்பு

சாத்தான்குளம், மார்ச் 2: அமுதுண்ணாக்குடியில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை ஊராட்சித் தலைவர் முருகன் திறந்து வைத்தார். சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணாக்குடி ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சித் தலைவர் முருகன் தலைமை வகித்து திறந்து வைத்தார். துணைத் தலைவர் கரன்ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ஜார்ஜ் சிங்கத்துரை வரவேற்றார். ஊராட்சி உறுப்பினர்கள் மரியராஜா, மேரி அல்போன்சா, இந்திராதேவி, ஜோதி பாண்டியன், நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : gymnasium ,park ,
× RELATED தமிழகம் மாளிகை பூங்கா பராமரிக்கும் பணி மும்முரம்