×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திசையன்விளை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

திசையன்விளை, மார்ச் 2: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தங்க மோதிரம் அணிவித்தார்.
ராதாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரபுரம், கோட்டைக்கருங்குளம், சமூகரெங்கபுரம், ராதாபுரம், பெட்டைக்குளம் பகுதிகளில் திமுக கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் தனபால், முருகன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், மீனவரணி துணை அமைப்பாளர் ஜோசப், மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெய்சங்கர், ஒன்றிய பிரதிநிதி நசுருதீன், மகளிரணி ஜெயமேரி, ஊராட்சி செயலாளர்கள் குமாரபுரம் ராஜன், உறுமன்குளம் அமெச்சியார், கோட்டைக்கருங்குளம் சொக்கலிங்கம், சமூகரெங்கபுரம் முரளி, ராதாபுரம் கோவிந்தராஜ், பரமேஸ்வரபுரம் கல்கண்டு, கரைச்சுத்துப்புதூர் ஜாண் கருத்தையா, பாலசுப்பிரமணியன், நடராஜன், கெனிஸ்டன், டேவிட், சுப்பிரமணியன், இலங்காமணி, மைக்கேல்ராஜ், அகஸ்டின், ராஜ்குமார், சுடலை, செழியன், கருணாராஜ், இசக்கிமுத்து, முருகேஷ், கல்யாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,Birthday Celebration ,
× RELATED சொல்லிட்டாங்க...