×

நெல்லை ரயில்களின் போக்குவரத்தில் நாளை முதல் மாற்றம்

நெல்லை, மார்ச் 2: நெல்லை - தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை ரயில்களின் போக்குவரத்தில் நாளை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வண்டி எண் 22627/22628 திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் நாளை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை கோவில்பட்டி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் 9ம் ேததி திங்கட்கிழமை மட்டும் வழக்கம் போல் செயல்படும்.

வண்டி எண் 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் நாளை 3ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரை திண்டுக்கல் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் வழக்கம் போல் செயல்படும். வண்டி எண் 16192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாளை முதல் 10ம் தேதி வரை நாகர்கோவில் - திண்டுக்கல் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் 9ம் தேதியன்று திங்கட்கிழமை மட்டும் வழக்கம் போல் செயல்படும்.

வண்டி எண் 56769/56770 பாலக்காடு - திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரயில் நாளை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை கோவில்பட்டி - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் 9ம் தேதி திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும். இதே ரயில் வரும் 4ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் மதுரை - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் நாளை முதல் 10ம் தேதி வரை மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 9ம் தேதியன்று மட்டும் வழக்கமான நேரத்தில் புறப்படும்.
வண்டி எண் 11022 நெல்லை-  தாதர் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் நாளை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெல்லை ரயில் நிலையத்திலிருந்து மாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 9ம் தேதி மட்டும் வழக்கம் போல் இயக்கப்படும்.

வண்டி எண் 56767/56768 தூத்துக்குடி - திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில் நாளை முதல் 10ம் ேததி வரை தூத்துக்குடி - திருநெல்வேலி நிலையங்களுக்கு இடையே  பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 56768 திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில் இன்று(2ம் தேதி) நெல்லை- தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
வண்டி எண் 56767 தூத்துக்குடி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் வரும் 11ம் தேதி  தூத்துக்குடி - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

Tags :
× RELATED போக்குவரத்து துறையில் கூடுதல் கமிஷனர் நியமனம்