×

டிக்டாக்கில் ராஜிவ்காந்தியை கொச்சைப்படுத்தியவர் மீது நடவடிக்கை

நெல்லை, மார்ச் 2: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டிக்டாக்கில் கொச்சைப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரசார் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து நேற்று மனு அளித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனு: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்தியாவில் இளைஞர்கள் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களுக்கு சேவைகள் செய்வதிலும் முக்கிய பங்காற்றினார். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், இளைஞர்கள் அவரை போற்றி வருகின்றனர். இந்நிலையில்  1ம் தேதியன்று ராஜீவ்காந்தி நினைவு சின்னம் அமைந்துள்ள இடத்தின் முன்பு நின்று கொண்டு ஒருவர், அவரது மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சாட்டை என்ற பெயரில் அப்பதிவு வருகிறது.

இதனால் கட்சியினர், பொதுமக்கள்  வேதனையடைந்துள்ளனர்.சட்டம் ஒழுங்கை சீர்குலைய வைக்கும் இத்தகைய டிக்டாக் பதிவுகளை செய்த நபரை கண்டுபிடித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர்கள் சொக்கலிங்ககுமார், மனோகரன், மாவட்ட செயலாளர் ரயில்வே கிருஷ்ணன், மாநில விவசாய அணி வாகை கணேசன், மண்டல தலைவர்கள் ஐயப்பன், மாரியப்பன், கெங்காராஜ், ரசூல் மைதீன், மாநில இளைஞரணி செயலாளர் விஸ்வாபாய், ஆபிரகாம், மானூர் பாக்கியகுமார், கே.எஸ்.மணி, வரகுணன், ராஜிவ்காந்தி பிரிகேட் அந்தோணி செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Rajiv Gandhi ,
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...