×

ஆத்தூர் பகுதியில் 5 குடிநீர் ஆலைகளில் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல்

ஆத்தூர், மார்ச் 2:  ஆத்தூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 5 குடிநீர் ஆலைகளில், ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைத்து வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கி வந்த 5 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு உயர்நீதிமன்ற உத்திரவின்படி ஆத்து£ர் கோட்டாச்சியர் துரை மற்றும் பொதுப்பணித்துறை நிலத்தடி நீர் ஆதார உதவி பொறியாளர் உமாரணி தலைமையிலான குழுவினர் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று சீல் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்த முடியாமல் செய்தனர். இதனால் நேற்று முதல் ஆத்தூர் பகுதியில் கேன் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளனார்கள். தற்போது இருப்பில் உள்ள கேன் குடிநீரை வியாபாரிகள் கேன் ஒன்றுக்கு ₹30 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் கடந்த 3 நாட்களாக கேன் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்தூர் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.

Tags : wells ,Deepwater ,area ,Attur ,drinking water plants ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...