×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் குழந்தைக்கு தங்க மோதிரம்

இடைப்பாடி, மார்ச் 2: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டிஎம்.செல்வகணபதி வழங்கினார். சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி வழங்கினார் நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் மாநில இணை செயலாளர் காவேரி, மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப மணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா, ஒன்றிய செயலாளர் ராஜேஸ், இடைப்பாடி நகர செயலாளர் பாஷா, ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அரசிராமணி பேரூர் செயலாளர் காவேரி, தேவூர் செயலாளர் முருகன், முன்னாள் பேரூர்  செயலாளர்கள் தங்கவேலு, பூவாகவுண்டர், மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்த்குமார், மணி ஆணைக்கவுண்டர், இளைஞரணி அமைப்பாளர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : baby ,birthday ,MK Stalin ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…