சிலைகள் உடைப்பு வழக்கில் துறையூர் முதியவர் கைது

சேந்தமங்கலம், மார்ச் 2: நாமக்கல் மாவட்டம் சேந்தமஙகலம் அருகே முத்துகாப்பட்டியில் பெரியசாமி கோயில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் நள்ளிரவு நேரத்தில் இக்கோயிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், அங்குள்ள சுவாமி சிலைகளை  உடைத்து சேதப்படுத்தினர். மேலும், கோயில் பூசாரியான ரகு மற்றும் அவரது தாயார் ஆகியோரது வீடுகளை சூறையாடி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த பரமசிவம், சிவப்பிரகாசம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி வந்தனர். இவர்களில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி(72) என்பவரை நேற்று கைது செய்தனர். கோயில் பூசாரியான அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>