×

கமுதியில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா திமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்

கமுதி, மார்ச் 2: கமுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் 67வது பிறந்த நாள் விழாவை தி.மு.க.வினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உத்தரவின் பேரில், வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான வாசுதேவன் தலைமையில் கொண்டாடினர். மாவட்ட தொண்டரணி பாண்டி, நகர் கழகம் பழக்கடை பாலமுருகன்,
ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, சிறுபாண்மையினர் பிரிவு நகரச் செயலாளர் சேசுராஜ், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, நாராயணபுரம் செயலர் முத்து, கொல்லங்குளம் செயலர் காசி, கோட்டைமேடு செயலர் வில்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

ராமநாதபுரம் பாரதிநகரில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப  அணி துணை ஒருங்கிணைப்பாளர் பிரவின் ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலிந் பிறந்தநாளை  முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை  பரிமாறிக்கொண்டனர். உடன் மண்டபம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்  முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணி து.அமைப்பாளர் கார்த்திக்கேயன், நகர்  வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணை  பொருளாளர் பிரித்திவிராஜ், 23வது வார்டு தகவல் தொழில்நுட்பம் அணி  அமைப்பாளர் ஹரிபிரசாத் உள்ளிட்ட கழகத் தோழர்கள்
கலந்துகொண்டனர்.  ராமநாதபுரம் நகர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்டாலின்  பிறந்தநாளையெட்டி ராமநாதபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் நகர் கழக செயலாளர்  கார்மேகம் தலைமையில்  இனிப்பு வழங்கி சிறப்பித்னர். உடன் கழக நிர்வாகிகள்.

Tags : Stalin ,birthday party ,Kamudi ,DMK ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி