×

ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி துவங்குவது பெருமைக்குரியது

ராமநாதபுரம், மார்ச் 2: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க சம்பவமான ‘கட்டபொம்மன்-ஜாக்சன்துரை இடையே வரி கட்ட முடியாது’ என கடும் வாக்குவாதம் நடைபெற்ற சிறப்புமிக்க ராமவிலாஸம் ராமநாதபுரத்தில் உள்ளது. வேலுநாச்சியார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன் ஆகியோர் பிறந்த இந்த மண்ணில் மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். மத நல்லிணக்கத்திற்கும், மதசார்பின்மைக்கும்  டுத்துக்காட்டாக திகழ்ந்த கிழவன் சேதுபதி-சீதக்காதியின் நட்பு இந்த மாவட்டத்தில் உருவானது.

இவ்வளவு பெருமைகளுக்கு பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்குவது மேலும் ஒரு சிறப்பாக அமைந்துள்ளது. 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதால் 1100 கூடுதல் இடங்களில் மாணவர்கள் படிப்பதற்காக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், ‘ராமநாதபுரம் மாவட்டம் இந்துக்களின் முக்கிய யாத்திரை தலமான ராமேஸ்வரம், டாக்டர் அப்துல்கலாம் மணிமண்டபம் உள்ளிட்ட பல சிறப்புகளை கொண்டது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்கள் மேல் அதிக பாசத்துடன் உள்ளார். தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி, பாரம்பரியத்தை வெளிநாடுகளில் கூறிவருகிறார். 11 மருத்துவ கல்லூரிக்கான திட்ட அறிக்கையை தமிழக அரசு விரைவாக அனுப்பியது பாராட்டுக்குரியது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் விரைவாக தொடங்கப்படும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்கு துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Tags : Ramanathapuram ,medical school ,
× RELATED ராமநாதபுரம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை