×

காவிரி ஆற்றில் குளித்த போது அடித்து செல்லப்பட்ட வாலிபர்

பென்னாகரம், மார்ச் 2: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சிவராமன்(29). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிவராமன் அவரது நண்பர்கள் 5பேருடன், ஒனேக்கல்லுக்கு நேற்று சுற்றுலா வந்தனர். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தனர். பின்னர் ஊட்டமலை பரிசல்துறை அருகே குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சிவராமன் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமானார். அவரது நண்பர்கள் காவிரி கரையோரத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து பரிசல் ஓட்டிகள் துணையுடன் வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Plaintiff ,Cauvery River ,
× RELATED ஷ்ஷ் அப்பா... கண்ண கட்டுதே...எந்த பக்கம்...