×

காவேரிப்பட்டணத்தில் அதிமுகவில் இணைந்த தமாகா நிர்வாகிகள்

கிருஷ்ணகிரி, மார்ச்.2:காவேரிப்பட்டணத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி முன்னிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமாகா இளைஞரணி தலைவர் வேட்டியம்பட்டி சரவணன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் தமாகா இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயபாண்டியன், இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் திருப்பதி, மதியழகன், இளைஞரணி மேற்கு வட்டாரத் தலைவர் சதீஸ்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் சந்திரபாலன், பர்கூர் வட்டார தலைவர் ராம்ராஜ், மாவட்ட இணை செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமாகா இளைஞரணியில் கட்சி பொறுப்பு வகித்து வந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது, அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, ஓட்டுனர் அணி பால்ராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி, பேரூர் செயலாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : executives ,Tamaka ,AIADMK ,
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...