×

போச்சம்பள்ளியில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

போச்சம்பள்ளி, மார்ச் 2: போச்சம்பள்ளியில் அனைத்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். பொருளாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில், கடைகள் மற்றும் வீடுகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் போச்சம்பள்ளி நகர் முழுவதும் ₹3 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா அமைப்பது. வாரச்சந்தையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி தனி இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுப்பது, போச்சம்பள்ளியில் கடைகளை வைக்க தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Merchants Association General Committee Meeting ,Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் சாராயம் காய்ச்ச வேலாமர பட்டைகள் உறிப்பது அதிகரிப்பு