×

மாநில யோகா, கராத்தே போட்டிகள் தேசிய போட்டிக்கு வீரர்கள் தகுதி

மதுரை, மார்ச் 2: மாநில அளவிலான யோகா, கராத்தே போட்டிகளில் வென்ற வீரர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். மதுரையில் மாநில அளவிலான யோகா மற்றும் கராத்தே போட்டி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியை கராத்தே தலைமை பயிற்சியாளர் செந்தில் குமார் துவக்கி வைத்தார்.

வட்டாசி கோஜூரியோ கராத்தே பள்ளியின் தொழில்நுட்ப இயக்குனர் மூவேந்திரன் தலைமை வகித்தார். யோகா போட்டியில் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தகுதிச் சுற்றில் 5 ஆசனங்களை செய்து காட்டினர். கராத்தே போட்டியில் கட்டா மற்றும் சண்டை பிரிவுகளில் வீரர்கள் அசத்தினர். இதில் சிறப்பாக செயல்பட்டு தேர்வு பெற்ற வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான யோகா மற்றும் கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர். தேசிய அளவிலான போட்டி ஏப்ரல், மே மாதங்களில் கோவாவில் நடைபெறுகிறது.

Tags : competitions ,
× RELATED கராத்தேவில் கலக்கும் இரட்டையர்கள்