×

பண்ணந்தூர் ஏரியிலிருந்து சின்னஏரிக்கு தண்ணீர் நிரப்ப பூமி பூஜை

போச்சம்பள்ளி, மார்ச் 2:போச்சம்பள்ளி  தாலுகா பண்ணந்தூர் பெரிய ஏரியிலிருந்து, சின்ன ஏரிக்கு தண்ணீர் நிரப்ப ₹23  லட்சம் மதிப்பில் சோலார் பேனல்கள் பொருத்தி, மின் மோட்டார் மூலம்  நீரேற்றும் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.
போச்சம்பள்ளி தாலுகா  பண்ணந்தூர் ஊராட்சி பெரிய ஏரியிலிருந்து, சின்ன ஏரிக்கு தண்ணீர்  நிரப்ப, பர்கூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹23  லட்சம் மதிப்பில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் மோட்டார் மூலம் நீரேற்றும்  பணிகளை, கலெக்டர் பிரபாகர் துவக்கி வைத்தார். பர்கூர்  எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கலெக்டர் பேசுகையில்,   ‘பண்ணந்தூரில் உள்ள பெரிய ஏரியிலிருந்து சின்ன ஏரிக்கு  நீர் செல்வதன் மூலமாக, பண்ணந்தூர் பாப்பாரப்பட்டி, வாடமங்கலம், தாமோதரஹள்ளி  உள்ளிட்ட கிராங்களில் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி மற்றும்  குடிநீர் வசதி பெறும். இதற்காக ₹23 லட்சம் மதிப்பில், 30 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சோலார்  பேனல் அமைத்து பணிகள் துவக்கப்பட்டுள்ளது,’ என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை விற்பனை குழு  இயக்குனர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம், இளங்கோ, துணை  தலைவர்கள் சங்கீதா சக்திவேல், கவுன்சிலர்கள் திருப்பதி, மாதன், பெரியசாமி,  வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Pooja ,Pannandur Lake ,Chinna Lake ,
× RELATED கோவை ஆழியாறு அணையில் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு