×

காரிமங்கலம் பகுதியில் தண்ணீர் விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்றும் விவசாயிகள்

காரிமங்கலம், மார்ச் 2: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், தண்ணீரை விலைக்கு தண்ணீர் வாங்கி பயிர்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் பெங்களூரு, மைசூர் மற்றும் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டுமே விவசாயத்தை கைவிடாமல், தற்போதும் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இப்பகுதியில் சரியான மழை இல்லாததால் கோடை காலம் வரும் முன்னரே, கிணறுகள் முற்றிலும் வறண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பயிர்களை காப்பாற்ற போதிய தண்ணீர் இல்லாத நிலையில், தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக நெற்பயிருக்கு தண்ணீர் அதிக அளவு தேவைப்படும் நிலையில், நாளொன்றுக்கு ₹1600 செலவு செய்து, 2 டிராக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர். விவசாய தொழில் லாபம் இல்லாத தொழிலாக மாறி விட்ட நிலையில், வேறுவழியின்றி விலைக்கு தண்ணீர் வாங்கியும், உரங்களுக்கு பணம் கடன் வாங்கியும் விவசாயம் செய்து வரும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : area ,Karimangalam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...