×

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 2: பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர்(பொ) தமிழ்தென்றல் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சேகர் வரவேற்றார். சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ராஜா, இடும்பன், டோமினிக், ஆசிரியர்கள் செந்தில், வேலு தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.

Tags : government school students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...