×

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வாயிற்கூட்டம்

தர்மபுரி,  மார்ச் 2: தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்துக் கழக அனைத்து  தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  பாரதிபுரம் புறநகர் பணிமனை முன் வாயிற் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மண்டல தொமுச தொழிற்சங்க தலைவர் சின்னசாமி தலைமை வகித்து பேசினார். தொமுச  பணிமனை தலைவர் சண்முகம், விஜயன், சரவணன், சென்னகேசவன், முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர்  அன்புமணி கலந்து கொண்டு பேசினார். 14வது ஊதிய  ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின்  வரவுக்கும்- செலவுக்குமான பற்றாக்குறையை சரி செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க  வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம்  செய்ய வேண்டும்.

மேலும், நிர்வாகங்கள் செலவு செய்த தொழிலாளர்கள் பணம் ₹8  ஆயிரம் கோடியை உடனே திருப்பி தரவேண்டும். டிஏ அரியர்ஸ், இஎல் சரண்டர்,  தையற்கூலி நிலுவைகளை உடனே வழங்க வேண்டும்.  ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு  ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அனைத்து தொழிற்சங்க  நிர்வாகிகள் சிஐடியூ சண்முகம், தொமுச சண்முகராஜூ, ஐஎன்டியூசி  தங்கவேல்,  சின்னமாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவுதமர் வரவேற்றார். சிவகுமார் நன்றி கூறினார். 

Tags : Trade Union Alliance ,
× RELATED அரசு தலைமை கொறடா தகவல் ஜனவரி 8ம் தேதி...