×

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 125-வது பிறந்த தினம்

திண்டுக்கல், மார்ச் 2: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 125-வது பிறந்த தினம் திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காமராஜர், சிவாஜி தேசிய பேரவை சார்பில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் காமராஜர் சிலை அருகே அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பேரவை மாவட்ட தேசிய அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பேரவை மாவட்ட துணைத்தலைவர் சுந்தர் ஈசன் வரவேற்றார். பேரவை மாவட்ட பொதுச்செயலாளர் தியாகு சிறப்புரையாற்றினார். மாநகர துணை தலைவர் பழனியப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பேரவை மாவட்ட நிறுவனர் வைரவேல் செய்திருந்தார்.

Tags : birthday ,Morarji Desai ,
× RELATED பினராய் விஜயனுக்கு 75வது பிறந்தநாள்