×

கார்த்திகை, முகூர்த்த தினமான நேற்று பழநியில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து கடும் பாதிப்பு''

பழநி, மார்ச் 2: கார்த்திகை, முகூர்த்த தினமான நேற்று பழநி நகரில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வார விடுமுறையின் காரணமாக பழநி கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதலே பழநி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வந்தது. பக்தர்கள் வந்த வாகனம் அடிவார பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மலைக்கோயில் செல்ல பக்தர்கள் வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர்.

Tags : pilgrimage ,Karthik ,Mukhtar ,pilgrims ,
× RELATED திருவண்ணாமலையில் தொடர்ந்து 3வது...