×

மாநகரின் 4 மண்டலங்களில் நடந்த சிறப்பு முகாமில் 4.75 கோடி வரி வசூல்

சேலம், மார்ச் 1:சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வசதிக்காக, புதிய கட்டிடத்திற்கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பு பெறுதல், பாதாள சாக்கடை வைப்பு தொகை, தொழில்வரி, கட்டிட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் போன்றவற்றிற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

முகாம் நடந்த சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களிலும் சேர்ந்து மொத்தம் 2,982 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்மூலம் சூரமங்கலத்தில் 1.03 கோடி, அஸ்தம்பட்டியில் 1.30 கோடி, அம்மாப்பேட்டையில் 1.35 கோடி மற்றும் கொண்டலாம்பட்டியில் 1.07 கோடி என மொத்தம் 4 கோடியே 75 லட்சத்து 89 ஆயிரம் பொதுமக்கள் வரியாக செலுத்தியுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Tags : camps ,city ,zones ,
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...