×

சேலம் கைதிகள் உற்பத்தி செய்த 42 கிலோ பட்டுக்கூடு விற்பனை

சேலம், மார்ச் 1: சேலம் மத்திய சிறை கைதிகள் உற்பத்தி செய்த 42 கிலோ பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு வேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கைதிகளுக்கு பட்டுக்கூடு வளர்ப்பு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறையின் பின் பகுதியில் மல்பெரி செடி வளர்க்கப்பட்டுள்ளது. 8 கைதிகள் பட்டுக்கூடு வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 2வது முறையாக 42 கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்துள்ளனர். இதனை பட்டுவளர்ப்புத்துறையில் விற்பனை செய்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு ₹560க்கு விலை போனது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பட்டுக்கூட்டின் விலை 400 ஆக இருந்தது.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனா பட்டுக்கூடு இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் பட்டுகூடுவிற்கு கூடுதல் விலை கிடைப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பட்டுக்கூடுவிற்கு நல்லவிலை கிடைப்பதால் கூடுதலாக 3 ஆயிரம் மல்பெரி செடி நடவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் தொய்வு இல்லாமல் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படும் என டிஐஜி சண்முகசுந்தரம், சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : prisoners ,Salem ,
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி