×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தர்மபுரி, அரூரில் தர்ணா போராட்டம்

தர்மபுரி,  மார்ச் 1:  குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தர்மபுரி, அரூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பெண்கள் திரளாக பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். தர்மபுரியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் நேற்று தர்ணா நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ஜஹாங்கீர்  தலைமை வகித்தார். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். அரூர்:  அரூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை செயலர் முகமது ரபீக் தலைமை வகித்தார்.  குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்கள் அதிகம்  பாதிக்கப்படுவார்கள். அதேபோல், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட  பலரும் பாதிக்கப்பட்டு அகதிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். எனவே,  குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதேபோல், தேசிய  குடிமக்கள் பதிவேடு பராமரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு திரும்ப  பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் அப்துல் ஹமீத், பக்ருதீன், சலீமா உள்ளிட்ட  அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : Dharmapuri ,Aroor ,
× RELATED இலவச மின்சாரம் பறிக்கப்படுவதை...