×

தர்மபுரியில் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் ஸ்டிரைக்

தர்மபுரி, மார்ச் 1: இந்தியா முழுவதும் மினரல் வாட்டர் சப்ளை செய்வதை மத்திய அரசு தடை  செய்யப்படுவதாக அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்டித்து, தர்மபுரி  மாவட்ட மினரல் வாட்டர் உற்பத்தி மற்றும் சப்ளை செய்பவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 11  மினரல் வாட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் உற்பத்தி செய்யாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தண்ணீர் கேன்களை சப்ளை செய்பவர்களும் கலந்து கொண்டனர்.  இதனால், தர்மபுரி நகர் மற்றும் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் தண்ணீர்  கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள்  கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் 11 மினரல் வாட்டர் உற்பத்தி செய்யும்  நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த மினரல் வாட்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூலம்  நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கிறது. 2014ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் ரிலக்ஸ் கேட்கிறோம். இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தால் மாவட்டத்தில் 7  மினரல் வாட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : Cane Drinking Companies ,Dharmapuri ,
× RELATED தர்மபுரியில் அறுவடை தாமதத்தால்...