×

குவாரியில் வெடி வைத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்.ஐ., அலுவலகம் முற்றுகை

திருச்செங்கோடு,மார்ச் 1: திருச்செங்கோடு அருகே குவாரியில் வெடி வைத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்.ஐ., அலுவலகத்தைகிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியம்கோக்கலை பகுதியில் தனியார் கல்குவாரிகள் விதிமீறி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார்தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குவாரியில்வெடி வைத்தபோது பாறைகள் சிதறி ரோட்டில்வந்து விழுந்தது. அப்போது, பள்ளிக்கு சென்று விட்டு அந்தவழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தமாணவிகள் மயிரிழையில் உயிர் தப்பினர். இதனால்,ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குவாரியைமுற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், வருவாய்த்துறையினர் விரைந்து சென்று சமரசப்படுத்தினர்.

அப்போது,திருச்செங்கோடு தாசில்தார் மற்றும் கனிம வளத்துறைஅதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுசெய்வதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும்உறுதி கூறினர். மேலும், விதி மீறிவெடி வைத்ததாக கூறி குவாரி ஊழியர்கள்2 பேரை எலச்சிப்பாளையம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதன்பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில்ஆய்வு செய்ய வரவில்லை எனவும்,போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும்குற்றம்சாட்டி எலச்சிப்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தைநேற்று காலை பொதுமக்கள் முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், தாசில்தார் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் சாந்தி,கிராம நிர்வாக அலுவலர் பிரபு,காவல் ஆய்வாளர் பழனியப்பன், உதவி ஆய்வாளர் மனோகரன்உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக வழக்குப்பதிவு செய்வதாகவும், கோக்கலை கிராமத்தில் உள்ள5 கல்குவாரிகளும் மார்ச் 5ம் தேதிவரை இயக்கக் கூடாது எனஅறிவிப்பதாகவும் தாசில்தார் கதிர்வேல் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர்கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தபோராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : RI ,office ,quarrying incident ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...