×

ராமநாதபுரத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா கலெக்டர், எம்எல்ஏ.க்கள் ஆய்வு

பரமக்குடி, மார்ச்1:  ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொள்கின்றனர்.  புதிதாக மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ராமநாதபுரம் பட்டனம்காத்தான் பகுதியில் நடைபெறுகிறது. இதில்,   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலையில்  சென்னையிலிருந்து  விமானம் மதுரை வந்து இறங்குகிறார். தேனியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.கள் வரவேற்கின்றனர். இதனைத்தொடர்ந்து மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் கார் மூலம் ராமநாதபுரம் வருகை தரும்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மற்றும் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அச்சுந்தன்வயல் பகுதியில் கலெக்டர் வீரராகவ ராவ் வரவேற்கிறார்.

இவரைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்எல்ஏக்கள் மணிகண்டன்,சதன் பிரபாகர், முன்னாள் எம்பி அன்வர்ராஜா, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டி, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி, துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன்,  நகர இளைஞரணி தஞ்சி சுரேஷ், அம்மா பேரவை வடமலையான் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.  இதனைத் தொடர்ந்து காலை  10.15 மணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  பின்னர் விருதுநகரில் நடைபெறும் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு  செல்கிறார்.

Tags : Ramanathapuram CM ,ceremony collector ,
× RELATED சீசனுக்கு ஏற்றமாதிரி புதுசு புதுசா...