(தி.மலை) 2 வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

செய்யாறு, மார்ச்.1: செய்யாறு, அனக்காவூர், மோரணம், வந்தவாசி மற்றும்  வடவணக்கம்பாடி ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில்  மொபட்டில் செல்லும் பெண்களை இடித்து தள்ளுவதுபோல் நாடகமாடி அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச்சரடு மற்றும் செயின் போன்ற நகைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டம், வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார்(25), மணிகண்டன்(23) ஆகிய 2 வாலிபர்களை கடந்த மாதம் அனக்காவூர் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி எஸ்பி சிபிசக்கரவர்த்தி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி, 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று முன்தினம் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகல் வேலூர் மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Related Stories:

>