×

ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரோஸ்மியாபுரத்தில் கிரிக்கெட் போட்டி

பணகுடி, மார்ச் 1: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிற்ந்தநாளையொட்டி பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தில் வள்ளியூர் ஒன்றிய திமுக, பணகுடி இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.  துவக்க விழாவுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற ஞானதிரவியம் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ அப்பாவு ஆகியோர் போட்டிகளைத் துவக்கிவைத்தனர்.இதில் 47 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல்பரிசு ரூ.16,066, 2வது பரிசு ரூ.10,066ம், 3வது பரிசு ரூ.7,066ம், 4ம் பரிசு ரூ.5,066 வீதம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.  இதில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி, ராதாபுரம் ஒன்றியச் செயலாளர் விஎஸ்ஆர்.ஜெகதீசன் வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவானந்தபெருமாள், பணகுடி இளைஞரணி அமைப்பாளர் கோபி. கோபாலகண்ணன், வள்ளியூர் இளைஞரணி தில்லைராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Cricket match ,birthday ,Stalin ,
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...