×

நெல்லையில் மாநில தடகள போட்டிகள்

நெல்லை, மார்ச் 1:  நெல்லையில் நடந்த மாநில தடகள போட்டிகளில் இருந்து 55 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு  தேர்வு செய்யப்படுகின்றனர். பாளை. அண்ணா விளையாட்டரங்கத்தில் மாநில அளவிலான 2 நாள் தடகள போட்டி  துவக்கவிழா நேற்று நடந்தது. மாநில தடகள சங்க செயலாளர் லதா, ெநல்லை மாவட்ட தடகள சங்க தலைவர் அய்யாத்துரை பாண்டியன் போட்டிகளை துவக்கி வைத்தனர். 18 வயதுக்குட்பட்டோர், 20 வயதுக்குட்பட்டோர் என 2 பிரிவுகளில் 46வகையான ேபாட்டி  நடைபெறுகிறது.  போட்டிகளில் 500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். நேற்று 100மீ, 200மீ ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 25 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல், 2ம், 3ம் இடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 2வது நாளான இன்றும் போட்டிகள் நடக்கின்றன. 2நாள் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சிறப்பிடம் பிடிக்கும் வீரர்கள் 55 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்.6ம்தேதி மத்திய பிரதேசம் போபாலில் நடக்கும் தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்பர் என மாநில தடகள சங்க செயலாளர் லதா தெரிவித்தார். நிகழ்ச்சிகளில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ, துணை செயலாளர் உஸ்மான்அலி, மாநில ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், எழில்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : State Athletics Competition ,Nellie ,
× RELATED 144 தடையால் நெல்லையில் வீட்டில் எளிய...