×

திருவள்ளூர் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்கள் மூட நடவடிக்கை

திருவள்ளுர், மார்ச் 1: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட்கள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதனால் ஆட்சேபனை இருந்தால் அந்தந்த கோட்டாட்சியர்களிடம் பொதுமக்கள் புகார் மனுவை அளிக்கலாம்  மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:  திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரேணிகுண்டா வரையிலான இருப்பு பாதையில் நாள்தோறும் பயணிகள் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள், சரக்கு ரயில்கள் பலமுறை சென்று திரும்புகின்றது. எனவே இந்த இருப்பு பாதையில் திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில் ஆளில்லாத ரயில்வே கேட்கள் உள்ளது. இந்த கேட்களில் ரயில் வரும் போது செல்வதாக எதிர்பாரதவிதமாக விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே, இதுபோன்ற ஆளில்லாத ரயில்வே கேட்களை குறைத்து, தேவையான இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளவும் ரயில்வே துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி பஜார், நெமிலிச்சேரி, சேலை, ஏகாட்டூர், பானம்பாக்கம், ராமன்கோயில், தொழுதாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் செல்லிடப்பேசி - 9445000412 என்ற எண்ணிலும், பெருமாள் தாங்கல் புதூர் பகுதியை சேர்ந்தோர் திருத்தணி கோட்டாட்சியரிடம் செல்லிடப்பேசி - 9445000411 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆட்சேபனையை அறிவிப்பு வெளியான 15 நாள்களுக்குள் மனு மூலமாகவே அல்லது நேரிலோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : railway gates ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...