×

அனைத்து மருத்துவ செலவுகளையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை

நாகர்கோவில், மார்ச் 1 : தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் அகஸ்தீஸ்வரம் வட்ட கிளை செயற்குழு கூட்டம், நாகர்கோவிலில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சசி வரவேற்றார். கூட்டத்தில் தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு a350க்கு பதில், a150 மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான செலவு , அனைத்து மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள், மருந்துகளுக்கான கட்டணம் அனைத்தும் காப்பீடு திட்டத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும். புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றாலும், அனைத்து செலவுகளையும் காப்பீடு நிறுவனமே ஏற்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட அட்டை காலதாமதமின்றி வழங்க வேண்டும். அட்டையில் உள்ள குறைபாடுகளை கருவூலத்திலே சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்ட துணைத்தலைவர் குமாரசுவாமி பிள்ளை மற்றும் நிர்வாகிகள், ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pensioners ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்