×

குன்னூர் பகுதியில் மருத்துவ கழிவுகளை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் நோய் பரவும் அபாயம்

குன்னூர், மார்ச் 1:குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில காலமாக வனப்பகுதிகளுக்குள் அதிகளவில் மருத்துவ கழிவுகளை வீசி செல்வதாக புகார் எழுந்து வருகிறது.  குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளை பெறுவதற்கு என தனியாக தனியார் மருத்துவர்கள் சுகாதாரத்துறையிடம் முறையான அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்கள் வாங்கிய பின்னரே குப்பை கிடங்கில் மருத்துவ கழிவுகளை வாங்கப்படுகிறது. ஆனால் குன்னூர் பகுதியில் உள்ள பல தனியார் மருத்துவர்கள் முறையான அனுமதி பெறாமல் மருத்துவ கழிவுகளை குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் அடர்ந்த வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மனிதர்கள் வனப்பகுதிகள் நடந்து செல்வதால் மருத்துவ கழிவுகளால் நோய் தாக்கும் அபாயமும் நிலவிவருகிறது. எனவே  குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்று ஆய்வுகள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது போன்று மருத்துவ கழிவுகளை வனப்பகுதிகள் வீசி செல்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : forest areas ,Coonoor ,
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது