×

ஊட்டி நகர திமுக. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 36 வார்டிலும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு

ஊட்டி, மார்ச் 1:திமுக., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு ஊட்டி நகரில் உள்ள 36 வார்டுகளிலும் திமுக., கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது என நகர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஊட்டி நகர திமுக., செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, முன்னாள் இலக்கிய அணி புரவலர் பெரியசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதி ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு ஊட்டி நகரில் உள்ள 36 வார்டுகளிலும் திமுக. கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்குவது, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, காது கேளாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது மற்றும் ரத்ததானம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வரும் 3ம் தேதி ஊட்டி ஏடிசி. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், கட்சி பாடகர் குத்தூஸ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தேசிய குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும், முன்னாள் மீன் வளத்துறை அமைச்சரும், எம்எல்ஏ.,வுமான கே.பி.பி.சாமி, மறைவிற்கும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவிற்கும், ஊட்டி நகர அவைத்தலைவராக இருந்த தியாகராஜன் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், நிர்வாகிகள் ஜெயகோபி, ரவீந்திரன், புஷ்பராஜ், ஜூபீர், நிக்கோலஸ், சீனிவாசன், வெங்கடேஷ், கிருஷ்ணன், குமார், சதாசிவம், தியாகராஜன், வீராசாமி, ஜெர்ரி, ஸ்டேன்லி, ரிச்சர்ட் ரவி, மஞ்சுகுமார், செல்வா, கண்ணன், ஷானவாஸ், சுரேஷ், பெரியசாமி, அசரப்அலி, சதீஷ்குமார், விஜயகுமார், விஷ்ணு, மகளிர் அணியை சேர்ந்த கீதா, புஷ்பா, டெய்சி, லூவிசா, பர்னத்மேரி, கண்ணகி, வனிதா, பிரேமா, மேரி, லலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty City DM ,ward ,birthday ,Stalin ,
× RELATED திருத்துறைப்பூண்டி 17வது வார்டு...