×

சிறையில் நெருக்கடியை தவிர்க்க ஜி.எச். செல்ல அடம் பிடிக்கும் கைதிகள்

கோவை, மார்ச் 1: கோவை சிறையில் இருக்கும் தண்டனை கைதிகள் சிலர், மருத்துவ சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை செல்ல அடம் பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் 1,820 கைதிகள் உள்ளனர். இதில் 600க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் சிலர், உடல் நலக்குறைவை காரணம் காட்டி அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற விரும்புகின்றனர். சிறை மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதிக்கும்போது நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தால்தான் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புவது வழக்கம். ஆனால் ரத்த அழுத்தம் சிறிது குறைவாக, அதிகமாக இருந்தால் கூட மயக்கம் வருகிறது, நெஞ்சு வலிக்கிறது என சில கைதிகள் அடம் பிடித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என கேட்டு வருகிறார்கள். தினமும் 5 முதல் 10 கைதிகள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என நிர்வாகத்தினரிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் சிறை நிர்வாகம் அரசு மருத்துவமனைக்கு கைதிகளை அனுப்ப மறுத்து வருகிறது.

கைதிகள் 2 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற பிறகு, கைதி்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப கறாக மறுத்து வருகின்றனர். கடந்த ஆண்டில் சிறையில் இருந்து 132 கைதிகள், கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிறை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘சிறையில் இருந்து மருத்துவமனைக்கு சென்றால் ஜாலியாக இருக்கும் என சில கைதிகள் நினைக்கிறார்கள். மருத்துவமனையில் சிறையைபோல் பலத்த காவல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அங்கே யாரையும் சந்தித்து பேச முடியாது. தீவிர நோய் பாதிப்பு இருந்தால் மட்டுமே சிறை கைதிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்’’ என்றனர்.

Tags : Prisoners ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்