×

இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவையொட்டி இருசக்கர வாகன பேரணி

கோவை மார், 1:  இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்து வரும் இருசக்கர வாகன பேரணி, நேற்று  கோவை வந்தடைந்தது. இந்த பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பு 1920ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி இரு சக்கர வாகன பேரணி கடந்த 6ம் தேதி தூத்துக்குடியில் துவங்கியது. இந்த பேரணி தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக இன்று கோவை மாவட்டம் வந்தது.இந்த பேரணியை செஞ்சிலுவை கட்டிடம் முன்பு மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோவை ரெட் கிராஸ் சேர்மன் நந்தினி ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணி வரும் 11ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் பேரணி கொடி வழங்கப்பட உள்ளது. பேரணியில் 175 வாகனங்களில் 350 யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள்  பங்கேற்றுள்ளனர்.

Tags : rally ,centenary ,Indian Red Cross ,
× RELATED இந்திய செஞ்சிலுவைச் சங்கம்...