×

அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம்

அருப்புக்கோட்டை, மார்ச் 1:  குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அருப்புக்கோட்டை புதிய பஸ்நிலையம் பகுதியில் தர்ணா போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சிந்தாஷா தலைமை வகித்தார்.  மாவட்ட பேச்சாளர் இராஜை ராபீக் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், ஆகிய சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.   கிளை நிர்வாகிகள் மதார் சிக்கந்தர், ஹக்கீம் சேட், சகுபர் சாதிக், கிளைச் செயலாளர் அகமது அக்பர் ஆகியோர் உட்பட 400க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி ராஜபாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  தர்ணா போராட்டம் நடந்தது. பொன்விழா மைதானம் அருகே நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹம்மது சபிக் தலைமை வகித்தார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் குடியுரிமை திட்டத்தை வாபஸ் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பினர். கிளைச்செயலாளர் காஜா நன்றி கூறினார்.

Tags : Protests ,Aruppukkottai ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...