×

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

திருப்புவனம், மார்ச் 1: திருப்புவனம் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலியானார். திருப்புவனத்திலிருந்து கருவக்குடிக்குச் சென்ற ஷேர் ஆட்டோ கீழராங்கியம் விலக்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் தவத்தாரேந்தலை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (35) அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பழையனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்