×

மணப்பாட்டில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

உடன்குடி,மார்ச் 1: உடன்குடி அருகே மணப்பாட்டில் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடந்ததுஉடன்குடி அருகே மணப்பாட்டில் நடந்த சுகாதார விழிப்புணர்வு பேரணிக்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் கிரேன்ஸிட்டா வினோ வரவேற்றார். யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, அரவிந்தன், மணப்பாடு ஊர்நலக்கமிட்டி தலைவவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகளில் வழியாக விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
இதில் யூனியன் கவுன்சிலர் லெபோரின், பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜொலிசன், வார்டு கவுன்சிலர்கள் டீமென்ஸ், ஜோஸ்பின், செல்வம், கார்மேலா, தர்மர், சுமதி, ரொசாந்தினி, டிலக்சனா மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : Manappadu ,
× RELATED அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலையில்...