×

நாசரேத்தில் காட்சி பொருளாக இருந்த துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

நாசரேத், மார்ச் 1:நாசரேத்தில் காட்சி பொருளாக இருந்த துணை வேளாண்மை விரிவாக்க மையம் தினகரன் செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டது.   நாசரேத் கே.வி.கே சாமி சிலை அருகே மெயின் ரோட்டில் ரூ.30 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு 6 மாதமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து கடந்த 26ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக துணை வேளாண் மையத்தை தூத்துக்குடி வேளாண்மை  இணை இயக்குநர் முகைதீன் தலைமை வகித்து நேற்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.  ஆழ்வார்திருநகரி வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், உதவிபொறியாளர் நடராஜன், வள்ளியூர் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், தென்கரைகுளம் பாசன சங்க செயலாளர் ராஜேந்திரன் பேசினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு அம்மா திட்டம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மாவட்ட அளவிலான நுண்ணீர் பாசனம் பயிற்சி நடந்தது.

ஜெயின் இரிகேசன்உழவியல் துறை நிபுணர் குருசாமி, விவசாய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், அமைக்கும் முறைகள், நன்மைகள், மானிய விவரங்கள் பற்றி விளக்கினார். பயறுவகை திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு மானியத்தில் சுழற்கலப்பை வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்டன. இதில் நாசரேத் பேரூராட்சி செயல்அலுவலர் வெங்கட், பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசிங், நாசரேத், கருங்கடல், வெள்ளமடம், பேய்குளம், மீரான்குளம், பழனியப்பபுரம் கிராமங்களை சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர். ஆழ்வார்திருநகரி வேளாண்மை அலுவலர் திருச்செல்வன் நன்றி கூறினார். நாசரேத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் தினகரன் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Opening ,Sub-Agricultural Extension Center ,Nazareth ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு