×

தூத்துக்குடியில் மாநில பளுதூக்கும் போட்டி

தூத்துக்குடி, மார்ச் 1: தூத்துக்குடியில் மாநில அளவிலான ஆண் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிதொடங்கியது.தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சசூர் பளுதூக்கும் சங்கம், தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான 70வது ஆண் மற்றும் 34வது பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியை நடத்தியது. தூத்துக்குடி கோரம்பள்ளம் எஸ்.டி.ஆர். பள்ளி வளாகத்தில் நடந்த பளுதூக்கும் போட்டி துவக்க விழாவிற்கு தமிழ்நாடு பளுதூக்கும் சங்க தலைவர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் தலைமை வகித்து பேசினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் அசோக் வரவேற்றார். அர்ச்சுணா விருது பெற்ற வீரர் தமிழ்செல்வன், மாநில பளுதூக்கும் சங்க பொதுச்செயலாளர் நவராஜ் புல்கானின் டேனியல், பொருளாளர் ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில உதவித்தலைவர் பல்ராம் சேட் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்க தலைவர் ரத்னா தர்மராஜ் ஆகியோர் போட்டிகளை தொடங்கிவைத்தனர்.

இதில் தொழிலதிபர் டி.ஏ.தெய்வநாயகம், மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் நெல்சன் பொன்ராஜ், திருச்சி தனராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பளுதூக்கும் போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 வீரர்கள், 70 வீராங்கனைகள் என 130 பேர் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிறு) மாலை 4.30 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பு குழுவினர் குணசேகர், செல்வின், ஹதர், பிரதீப், அலெக்ஸ்ஞானமுத்து, அற்புதராஜ், ஜார்ஜ்ஈஸ்டர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags : State weightlifting competition ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு...