×

அதிராம்பட்டினம் பகுதியில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் 3பேர் கைது

அதிராம்பட்டினம், மார்ச் 1: அதிராம்பட்டினம் பகுதியில் 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.அதிராம்பட்டினம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி( பொ )செங்கமலக் கண்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் ஆகியோர் தனிப்படை போலீசார் வெங்கட்ராமன் என்பவரிடம் விசாரணை செய்தனர். இதில் கஞ்சா மூட்டைகளை கடத்துவதற்காக அதிராம்பட்டினம் மறவக்காடு அலையாத்திக் காடு பகுதியில் மறைத்து வைத்திருந்த 220 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் படகை இயக்க வைத்திருந்த 5 லிட்டர் ஆயில் ஆகியவற்றை கைப்பற்றினர். இதையடுத்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கட்ராமன், முருகேசன் மற்றும் குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.


Tags : persons ,Adirampattinam ,
× RELATED பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது