×

கும்பகோணத்தில் 3 பெருமாள் கோயில்களில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம்,மார்ச் 1: மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் மூன்று பெருமாள் கோயில்களில் மாசி மக திருவிழாவையொட்டி கொடியேற்றம நடைபெற்றது.கும்பகோணத்தில் உள்ள 5 முக்கிய வைணவத்திருத்தலங்களுள் ஒன்றாக சக்கரபாணி சுவாமி கோயில் திகழ்கிறது.இக்கோயிலில் மாசிமகத்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடிமரம் அருகே சக்கரபாணிசுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாரோடு காட்சியளித்தார்.தொடர்ந்து கொடிமரத்திற்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும் 9 ம்தேதி வரை தொடர்ந்து நடைபெறும் விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.வரும் 3 ம்தேதி காலையில் பல்லக்கிலும், இரவு கருடசேவையும், ஒலைச்சப்பரம் முக்கிய விழாவான வரும் 8 ம்தேதி அதிகாலை 4.30மணிக்குள் மாசிமகத்தை முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணிசுவாமி தேரில் காட்சியளிக்கின்றார். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடைபெறுகிறது. 9 ம்தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதே போல் ஆதிவராக பெருமாள் கோயில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித்தாயாரோடு எழுந்தருளினார். தொடர்ந்து காலை கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதே போன்று ராஜகோபாலசுவாமி கோயிலில் நேற்று காலை மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


Tags : celebration ,Kumbakonam ,
× RELATED முஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்