×

பொதுமக்கள் குற்றச்சாட்டு 100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம், பொறியியல் போதித்தது புதுக்கோட்டை மன்னர் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழாரம்

புதுக்கோட்டை, மார்ச்1: புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, நூறு ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தையும் பொறியியலையும் போதித்த கல்லூரி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் புகழாரம் சூட்டினார்.புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் 1,058 பேருக்கு பட்டங்களை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசியது:இதே கல்லூரியில் பயின்ற நான் இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேச வந்திருப்பது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம். மன்னர் கல்லூரி 1857ம் ஆண்டு இலவச ஆங்கிலப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 1880 ஆண்டு கல்லூரியாக மாறியது. 1880ல் 19 மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி, தற்போது 140 ஆண்டுகளைக் கடத்து பல ஆயிரம் மாணவர்கள் பயிலக் கூடிய கல்லூரியாக மாறியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயப் பாடங்களையும் பொறியியல் பாடத்தையும் போதித்த கல்லூரி இது. மிகப்பெரிய சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.

பெண்கள் கல்லூரிக்குள் காலடி வைக்க முடியாது என்ற நிலை இருந்த காலத்திலேயே, இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி படித்த கல்லூரி இந்தக் கல்லூரி. அவரின் கல்லூரித் தோழர்தான் சுதந்திரப் போராட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி.
இவர்களைப் போன்று எண்ணற்ற புகழ் பெற்றவர்களை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு. இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெறும் நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைக்குரியவர்களாக உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றார் சுரேஷ்குமார்.
கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமை வகித்தார். கல்லூரித் தேர்வு நெறியாளர் நாகேஸ்வரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், முன்னாள் தேர்வு நெறியாளர் பேராசிரியர் பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.திருமண உதவிதிட்டத்தில் விண்ணப்பத்து திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பிறந்ததற்கான மகப்பேறு உதவித்தொகை பெற்று விட்டார்கள். ஆனால் இதுவரையிலும் அவர்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்படவில்லை.

Tags : Pudukkottai ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...