×

மாமியாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

கூடுவாஞ்சேரி, பிப்.28: மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாரை, சரமாரியாக அரிவாளால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி, ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் சிவா (48). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதையொட்டி, கடந்த 2 மாதங்களுக்கு முன், மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் தமிழ்ச்செல்வி கோபித்து கொண்டு, ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது தாய் சுசீலா (70) வீட்டுக்கு தமிழ்ச்செல்வி சென்றுவிட்டார். இதையடுத்து சிவா, கடந்த 25ம் தேதி, ஊரப்பாக்கத்தில் மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது, தனது மனைவியை குடும்பம் நடத்த அனுப்பும்படி, மாமியார் சுசீலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுசீலா, மகளை அனுப்ப மறுத்துவிட்டார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த சிவா, மறைத்து வைத்திருந்த வீச்சருவாளை எடுத்து, மாமியார் சுசீலாவின் தலை, கை, கால் உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினார். இதை கண்ட அப்பகுதி மக்கள், உயிருக்கு போராடிய சுசீலாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சிவாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (42). ஸ்ரீபெரும்பதூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 22ம் தேதி ஜெயலட்சுமி, உத்திரமேரூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு மொபட்டில் புறப்பட்டார். மாகரல் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்தஇருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஜெயலட்சுமி கழுத்தில் இருந்து 10 சவரன்  செயினை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். உத்திரமேரூர், செங்குந்த பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பங்கஜவள்ளி (57). அங்கன்வாடி ஊழியர். கடந்த 2 நாட்களுக்கு முன் பங்கஜவள்ளி, உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் மருத்துவான்பாடி கூட்ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள், பங்கஜவள்ளியின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

  உத்திரமேரூர் அருகே காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா. திருப்புலிவனம் அரசு கல்லூரி விரிவுரையாளர். கடந்த 2 நாட்களுக்கு முன்,  பிரியங்கா வேலை முடிந்து, காட்டுப்பாக்கம் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர், அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட பிரியாங்கா, அலறி கூச்சலிட்டார். அதை கேட்டு ஓடிவந்த பொதுமக்களை கண்டதும், மர்மநபர் அங்கிருந்து தப்பினார். இதனால் நகை தப்பியது.இச்சம்பவங்கள் குறித்து உத்திரமேரூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். உத்திரமேரூர் பகுதியில் தொடர் வழிப்பறி, திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடப்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுிறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் மாமன்னர் அசோகர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜெனித்ராஜ் (30). சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவியும் இன்ஜினியர். நேற்று முன்தினம் காலை ஜெனித்ராஜ், வீட்டை பூட்டி கொண்டு மனைவியுடன் வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : mother-in-law ,
× RELATED ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது