×

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 67 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

உத்திரமேரூர், பிப். 28: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் 67 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 67 வது பிறந்தநாள் விழாவையொட்டி, 67 கிலோ எடையில் பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாடினர். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்கள் சோழனூர் மா.ஏழுமலை, காவனூர் புதுச்சேரி சுப்பையா, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், நகர செயலாளர் பாரிவள்ளல் வரவேற்றனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு 67 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி, பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர் தனியார் மண்டபத்தில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் மார்ச் 1 தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கிளை தோறும் கட்சி கொடியோற்றி இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்க வேண்டும். மார்ச் 4 தேதி உட்கட்சித் தேர்தல் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : cake cake celebration ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு