×

துணை ஜனாதிபதி மாமல்லபுரம் வந்தார் இன்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார்

மாமல்லபுரம், பிப். 28: மாமல்லபுரத்தில் துணை ஜனாதிபாதி வெங்கையா நாயுடு, சிற்ப கல்லூரியில் திருவள்ளுவர் சிலையை இன்று திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மாமல்லபுரத்தில் உள்ள அரசு கட்டடக்கலை மற்றும் சிற்ப கலைக் கல்லூரியில் உள்ள சிற்பங்களை பார்வையிட நேற்று காலை வந்தார். அவருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், தனியார் விடுதியில் தங்கினார்.இன்று காலை 11 மணியளவில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்ப கல்லூரியில், மாணவர்கள் கை வண்ணத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள, 5 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் ஒவ்வொகு கட்டிடமாக சென்று, அங்குள்ள கற் சிற்பம், சுதைச் சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம் ஆகியவற்றை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர், அங்கிருந்து 12 மணிக்கு வடநெம்மேலியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு நிகழ்ச்சி முடிந்து, இரவு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து, ஓய்வு எடுக்கிறார். நாளை மாலை 3 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.துணை ஜனாதிபதி வருகையொட்டி 2 தனியார் விடுதி, சிற்ப கலைக் கல்லூரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Vice-President ,Mamallapuram ,Thiruvalluvar ,
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...