×

சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தது மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்தன காளைகள்

மணப்பாறை, பிப்.28: மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 9 பேர் காயமடைந்தனர். மணப்பாறை அருகேயுள்ள கலிங்கப்பட்டி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. போட்டியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 636 காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை அடக்க சுற்றுக்கு 40 வீரர்கள் வீதம் 236 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போட்டியில் பங்குபெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கான மாட்டின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்களை அமைச்சர்கள் வழங்கினர். இதில் காளைகள் முட்டி 9 பேர் காயமடைந்தனர். போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்காக கூடுதல் எஸ்.பி. குணசேகரன், மணப்பாறை டிஎஸ்பி., குத்தாலிங்கம் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Bullocks ,Chennai ,Tiruchi ,Manapparai ,Kalingapatti ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு