×

தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா

கடலூர், பிப். 28: தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரமாகக் கொண்டாட பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற உள்ளன.

தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழமைப்புகளின் நிர்வாகிகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆட்சிமொழி சட்ட வார விழாவில் கலந்து கொள்ளலாம். நிகழ்விடம், நாள், நேரம் குறித்த விவரங்கள் அனைத்தையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம். ஆட்சி மொழி சட்ட வாரவிழா நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Language Law Festival ,
× RELATED மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா துவக்கம்