×

2வது கொலை வழக்கில் சைக்கோ வாலிபர் சிறையில் இன்று கைது

சேலம், பிப்.28: சேலத்தில் தொடர்ச்சியாக நடந்த 3 கொலை வழக்கில் பிடிபட்ட சைக்கோ வாலிபரை 2வது கொலை வழக்கில் சேலம் சிறையில் இன்று கைது செய்கின்றனர். சேலம் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள நிழற்கூடம் பகுதியில், கடந்த 1ம் தேதி நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த பெரியசாமி(65) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 2ம் தேதி திருவாக்கவுண்டனூர் பைபாஸில் வடமாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 3ம் தேதி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வணிக வளாகத்தில் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பழக்கடை வியாபாரியின் தந்தை அங்கமுத்து(60) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தொடர்ந்து 3 நாட்கள் 3 கொலைகள் நடந்ததால் போலீஸ் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி யடைந்தனர். இந்த தொடர் கொலையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பக்கமுள்ள சித்தேரியூரைச் சேர்ந்த ஆண்டிசாமி(19) என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர். 3 கொலைகளையும் தானே செய்ததாக போலீசாரிடம் அவர் கூறினார். என்றாலும் சிசிடிவி  கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், டவுன் வணிகவளாகத்தில் நடந்த அங்கமுத்து, கொலை வழக்கில் அவரை கைது செய்த டவுன் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆண்டிசாமியை சேலம் சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் மல்லசமுத்திரத்தை சேர்ந்த பெரியசாமி, தலையில் காயத்துடன் கிடந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்டமாக அவர் தவறி விழுந்து இறந்துவிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால்இ பிடிபட்ட வாலிபர்அ அவரையும் நான் தான் கொலை செய்தேன் என கூறினார். பெரியசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து, கொலை வழக்காக மாற்ற போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், சூரமங்கலத்தில் நடந்த பிச்சைக்காரர் கொலை வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆண்டிசாமியை, போலீசார் இன்று கைது செய்கின்றனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்கின்றனர்.

Tags :
× RELATED ஸ்ரீவைகுண்டம் அருகே மதுபானத்தில்...