×

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி அறை கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம்

நாமக்கல், பிப்.28: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வுகள் வரும் 2ம் தேதி துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 84 மையங்களில் நடைபெறும் இத்தேர்வினை, 20 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகிறார்கள். தேர்வு பணியில் 1320 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல், திருச்செங்கோடு என இரண்டு இடங்களில் தனித்தனியாக நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  அய்யணன் கலந்து கொண்டு, அறை கண்காணிப்பாளர்களின் கடமைகள், தேர்வு மையத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என பது குறித்து விளக்கி பேசினார்.இக்கூட்டங்களில், மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  அறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் இன்று(28ம் தேதி) அந்தந்த தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

Tags : Government ,Advisory Meeting for Plus Two ,General Election Room Supervisors ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...