×

பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தல்

திருப்பூர், பிப்.28:உலகில் பாலிஸ்டர் ஆடைகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் பருத்தி ஆடையோடு பாலிஸ்டர் ஆடைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென தொழில் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலக அளவில், பாலிஸ்டர் மற்றும் செயற்கை இழை ஆடையின் தேவை அபரிமிதமாக உள்ளது. ஆனால், நமது நாட்டில், பருத்தி இழை ஆடைகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. செயற்கை இழை ஆடை உற்பத்திக்கான துணி ரகங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன.
வியட்நாம், சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளே, செயற்கை இழை ஆடை வர்த்தகத்தை கையகப்படுத்தி வைத்துள்ளன. பிற நாடுகளுக்கு இணையாக, நமது நாட்டு ஏற்றுமதியாளர்கள், செயற்கை இழை ஆடைகளை பெறுவது, சவால் நிறைந்ததாக உள்ளது. டியூட்டி டிராபேக் திட்டத்தில், அட்வான்ஸ் ஆதன்டிகேஷன் சர்ட்டிபிகேட் என்கிற முறையில், வரி விலக்குடன் செயற்கை இழை துணி இறக்குமதி செய்யலாம்.

திருப்பூரின் வர்த்தகத்தை மேம்படுத்த, செயற்கை இழை ஆடை உற்பத்தியிலும் தொழில் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  குளிர்கால ஆடை, விளையாட்டு ஆடை, யோகா ஆடை போன்ற சிறப்பு வகை ஆடை உற்பத்திக்காக, பாலியஸ்டர், சிந்தடிக் உள்ளிட்ட செயற்கை இழை துணிகளை, வரி விலக்குடன் இறக்குமதி செய்கின்றனர். துணி இறக்குமதி வரி, டிராபேக் பெற முடியாமையால், பிற நாடுகளுடன போட்டியை எதிர்கொண்டு, செயற்கை இழை ஆடை உற்பத்தி ஆடைகளை பெறுவது சிக்கலானதாக உள்ளது. ஜவுளித்துறைக்கான சிறப்பு பேக்கேஜ் திட்டத்தில், வரி விலக்குடன் இறக்குமதி செய்யும் துணிகளில் தயாரிக்கும் ஆடைகளுக்கும், டிராபேக் வழங்கப்படுகிறது. திருப்பூர் மட்டுமின்றி லூதியானா, மும்பை போன்ற நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்களை இதை பயன்படுத்தவேண்டும்.  ஐந்து சதவீதம் வரை டிராபேக் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், ஆடை விலையில் தளர்வு அளித்து, பிற நாடுகளுடனான போட்டியை சுலபமாக சமாளிக்க முடியும்; செயற்கை இழை ஆடை உற்பத்தி ஆர்டரை அதிகளவில் பெற முடியும்.

இது குறித்து தொழில் வல்லுனர்கள் கூறியதாவது: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், பிற நாடுகளில் இருந்து துணி இறக்குமதி செய்தே, பாலிஸ்டர், செயற்கை இழை ஆடை உற்பத்தியை தொடர வேண்டியுள்ளது. துணி இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிப்பதால், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது. பருத்தி இழை ஆடை உற்பத்திக்கு, ஆண்டு முழுவதும் ஆர்டர் கிடைப்பதில்லை. அதனால், ஆண்டு ஒன்றுக்கு, எட்டு மாதம் மட்டுமே ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழுத்திறனில் இயங்குகின்றன. வரி விலக்குடன் இறக்குமதி செய்யும் துணியில் தயாரிக்கும் ஆடைகளுக்கும் வரியினங்கள் காலதாமதம் இன்றி விரைவாக கிடைத்தால் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நமது நாட்டின் பாலிஸ்டர், செயற்கை இழை ஆடை உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். புதிய நாடுகளின் சந்தையை கைப்பற்றவும், போட்டி நாடுகளை எதிர்கொண்டு, ஆர்டர் பெறவும், நமது நாட்டு தொழில்துறையினருக்கு புது பலம் கிடைக்கும். அனைத்து சீசனுக்கான ஆர்டர் பெற்று, நிறுவனங்கள், ஆண்டு முழுவதும் முழு வீச்சில் இயங்கும் என்பதால், ஏற்றுமதி வர்த்தகம் மேம்படுவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : knitting manufacturers ,
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு